தென்காசி, செப். 14-
தென்காசி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு திறன் மற்றம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

               தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. வேலைவாய்ப்புடன் கூடிய திறன்  பயிற்சி திட்டத்தின் கீழ் அழகுக்கலை பயிற்சிஇ சுய வேலைவாய்ப்பிற்கான தையல் பயிற்சி  கணக்கு நிர்வாகம், வாகன ஓட்டுநர் பயிற்சி,  கணிணி பதிவு இயக்குபவர், பொது பணி உதவியாளர், வீட்டு சுகாதார உதவியாளர் போன்ற பயிற்சிகள் நடத்துவதற்கு உரிய நிறுவனங்களிடமிருந்து பிரேரணைகள் வரவேற்கப்படுகின்றன.


      திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளர்ப்பு அமைப்பின் இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப் பட்டிருக்க வேண்டும். பிரதான் மந்திரி கௌசல் கேந்திரா பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு மூலம் வழங்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஊதிய வேலைவாய்ப்பு திட்டங்களில் இதற்கு முன்னர் விதிமுறைகளின்படி சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டதற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும்.


            தகுதியான பயிற்சி நிறுவனங்கள் தங்களது (நிறுவனம் தொடர்பான முழுவிவரங்கள் அடங்கிய தொகுப்பு) பிரேரணைகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்,மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்காசி – 627811 என்ற முகவரிக்கு 17.09.2021 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்;.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/