தென்காசி, டிச.6:
தென்காசி மாவட்ட அளவிலான உலக மண்வள தினத்தை தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் ஸ்பிக் நிறுவனம் சார்பில் செங்கோட்டை வட்டாரம்கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமமான இலத்தூர் கிராமத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்குதென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா தலைமை தீங்கினார்.
செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தேர்வு செய்யப்பட்ட கிராமமான இலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி மற்றும் கற்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். மண் மாதிரி எடுத்தல் மற்றும் மண் வள அட்டையினை விவசாயிகள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி வேளாண்மை அலுவலர் ராஜேஸ்வரி விளக்கி கூறினார்.
நவீன முறையில் மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கி உரையாற்றும்போது மண் மாதிரி எடுத்தலின் அவசியம் பற்றியும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தும் பொழுது பயிரின் தேவை அறிந்து பயன்படுத்துதல் வேண்டும் என விவசாயிகளிடம் விளக்கிக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளை குழுக்களாக பிரித்து வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் குயிஸ் மாஸ்டராக இருந்து வினாடி வினா நிகழ்ச்சி நடத்தினார். நிகழ்ச்சியில் வேளாண் பெருமக்கள் அறியும் பொருட்டு வேளாண்மை உழவர் நலத்துறை யின் சார்பில் கண்காட்சியும் ஸ்பிக் நிறுவனத்தின் சார்பில் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மூத்த விவசாயிகள் கௌரவ படுத்தப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டாரம், புதூர், கற்குடி தவணை, இலத்தூர், சாம்பவர் வடகரை, உள்ளிட்ட பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தென்காசி பகுதியில் மரம் வளர்ப்பில் தீவிரமாகவும் ஆர்வமாகவும் செயல்பட்டு வரும் பிராணா மரம் வளர்ப்பு இயக்கம் மற்றும் இலத்தூர் பசுமை இயக்க செயல்பாடுகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
நிறைவாக ஸ்பிக் நிறுவனத்தின் விற்பனை அலுவலர் சமேஸ்வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கோட்டை வட்டார அட்மா அலுவலர்கள் பொன் ஆசிர், டாங்கே மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள்அருணாசலம், குமார், சம்சுதீன், ஜலால், உதவி விதை அலுவலர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். https://www.fao.org, https://www.tnagrisnet.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today