தென்காசி, சூலை 17:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினவிழா கொண்டாடப்பட்டது.
1987-ம் ஆண்டு முதல் மக்கள் தொகை தினம் ஜூலை-11 ம் தேதி ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தின் சார்பாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின விழா ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. கடந்த 11ம் தேதி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நுழைவாயிலில் மலர் செடிகள் மரு. இரா. ஜெஸ்லின் தலைமையில் நடப்பட்டது.
12ம் தேதி கர்ப்பிணி தாய்மார்களுக்கு குடும்ப நலம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மரு. அனிதா பாலின் தலைமையில் நடைபெற்றது. 13ம் தேதி அன்று தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.
14ம் தேதி மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய வரைபட போட்டி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட அளவில் செவிலியர் கல்லூரி மாணவிகளுக்கு மரு. இரா. ஜெஸ்லின், மரு. கே.ஜி. அனிதா பாலின் மற்றும் மரு. எஸ். அகத்தியன் ஆகியோர் தலைமையில் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் நடத்தப்பட்டது.
15ம் தேதி கர்ப்பிணி தாய்மார்களுக்கு மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய குடும்ப நல விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் கீழப்பாவூர் நாடார் மேல்நிலை பள்ளியில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்பு மற்றும் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா. ஜெஸ்லின் துவக்கி வைத்தார்.
16ம் தேதி உலக மக்கள் தினத்தை முன்னிட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனணி சொளந்தர்யா தலைமையில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் மரு. நெடுமாறன், மரு. அருணா (சுகாதாரப் பணிகள்), மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. இரா. ஜெஸ்லின், குடும்ப நல நோடல் ஆபிஸர் மரு. கே. ஜி. அனிதா பாலின் ஆகியோர் முன்னிலையில் அனைத்து செவிலியர்களும் மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
வரைபட போட்டி, கருத்தரங்கத்தில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மக்கள் தொகை தின விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஜனணி சொளந்தர்யா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நிருபர் நெல்லை டுடே