அக்.15 : தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக கைகள் கழுவும் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக கைகள் தினம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை தலைமை வகித்தார். பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திருமலை முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை குழந்தை தெரசா வரவேற்று பேசினார். கைகள் கழுவும் முறைகள் குறித்து தென்காசி வட்டார சுகாதார கண்காணிப்பாளர் வேலு, சுகாதார ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் செயல் விளக்கம் செய்து காட்டினர். உலக கைகள் கழுவும் தினம் உறுதிமொழியினை மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கைகள் கழுவும் பழக்கத்தை அன்றாட வாழ்வில் நான் தினமும் கடைப்பிடிப்பேன். தினமும் கைகளை சோப்பு மற்றும் சோப்பு கரைசல் போட்டு ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 20 வினாடிகள் கழுவுவேன். இதன் மூலம் ஏற்படும் நன்மைகளை எனது நண்பர்களுக்கும், சுற்றத்தாருக்கும் எடுத்துக்கூறுவேன். உணவு உட்கொள்வதற்கு முன்பும், பின்பும், கழிவறையை உபயோகப்படுத்திய பின்பும், பெறியில் சென்று வீடு திரும்பிய பின்பும் தவறாமல் கைகளை கழுவுவேன். முறையாக கைகளை கழுவுவதன் மூலம் வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, கொரோனா போன்ற சுவாச தொற்று நோய்கள், குடற்புழுக்கள், டைபாய்டு, சீதப்பேதி போன்ற நோய்களை தவிர்க்க முடியும் என்பதை அறிவேன். குழந்தைகளுக்கு கைகள் கழுவும் முறைகளை தெளிவாக எழுத்துரைப்பதன் மூலம் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தை பேணுவதோடு, கல்வியில் முன்னேற்றம் காணமுடியும் என்பதை அறிவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். https://www.tenkasi.nic.in Attachments area |
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today