தென்காசி, ஆக. 11:

தென்காசியில் உலக தாய்ப்பால் வார விழாவை கொண்டாடப்பட்டது.
தென்காசி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தை தொடர்ந்து பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் உலக தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தாய்ப்பாலின் மகத்துவம் அதன் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பதினால் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் நன்மைகள், தாய்மார்களின் உணவு பழக்கவழக்கம் குறித்த விழிப்புணர்வு ஒலிநாடா ஒலிபரப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தாய்ப்பால் அதிகரிக்ககூடிய உணவுகள், கர்ப்பிணிப் பெண்களுக்கான உணவுகள், கீரை வகைகள், தானியங்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அளிக்கக்கூடிய உணவுகள் குறித்த செயல்முறை தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெய்சூர்யா, மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின், மரு.கீர்த்தி, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today