தென்காசி, டிச 3:

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி மையம் சார்பாக உலக எய்ட்ஸ் தினவிழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இணை இயக்குனர்  மருத்துவர் வெங்கட்ராமன்  தலைமை தாங்கினார். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்  இரா.ஜெஸ்லின், உறைவிட மருத்துவ அலுவலர் மருத்துவர் அகத்தியன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏ.ஆர்.டி வட்ட அதிகாரி மருத்துவர் விஜயகுமார்  மரு.ராஜேஷ், மரு.லதா, மரு.மது, மரு.மணிமாலா, செவிலியர் கண்காணிப்பாளர்கள்  பத்மாவதி, வசந்தி, முத்துலட்சுமி மற்றும்  அனைத்து துறை மருத்துவர்கள்  ஏ.ஆர்.டி,நம்பிக்கை மைய பணியாளர்கள் மற்றும் அனைத்து மருத்துவமனை பணியாளர்கள் என சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எச்.ஐ.வி  எய்ட்ஸ் குறித்ததான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. முடிவில்  மருத்துவர் விஜயகுமார்  நன்றி கூறினார். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today