தென்காசி,  அக்.12:

தென்காசி கீழப்புலியூர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் மனு கொடுத்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு  கீழப்புலியூர் மக்கள் காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கீழப்புலியூர் 33-வது வார்டு சிமெண்ட் ரோடு வடக்கு பகுதியில் தாமிரபரணி குடிநீருக்காக இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் கொடுக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் இதுவரை குடிநீர் கிடைக்கவில்லை. 
எனவே எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/