தென்காசி, சூலை 9 –

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு கிராம  பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

 
இங்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இந்த நிதியாண்டில் 197 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைக்கவில்லை.


குடிநீர் இணைப்பு கிடைக்காத  அப்பகுதி பெண்கள், அனைவருக்கும் பாரபட்சமின்றி குடிநீர் வழங்கக்கோரி கற்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


அப்போது போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதாக உறுதி கூறினர்.  இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today