தென்காசி, அக் .11:
குற்றாலம் அருகே காட்டு யானைகள் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள தென்னந் தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.
குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சானாங்குளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை கீழே சாய்த்து அட்டகாசம் செய்துள்ளன.இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.மேலும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
எனவே விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்டவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/