தென்காசி, அக்.19:
ஆய்குடி அருகே காட்டுப் பன்றி, முயல்களை வேட்டையாடிய 4 பேருக்கு வனத்துறையினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் ஆய்க்குடி அருகே விந்தன் கோட்டை பரம்பு பகுதியில் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் உத்தரவின் பேரில் மேக்கரை பிரிவு வனவர் அம்பலவாணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் பெருமாள், ராஜா, வனக்காவலர் ஆனந்த் ஆகியோர் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்தனர். விசாரணையில், சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த மாயாண்டி மகன் பாலமுருகன் (வயது 37), தட்டார்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (24), கந்தசாமி மகன் மாரிமுத்து (27), பேச்சிமுத்து மகன் மாசானம் (29) ஆகியோர் என்பதும், முயல், காட்டுப்பன்றிகளை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட வனஅலுவலர் மற்றும் வனஉயிரின காப்பாளர் முருகன் உத்தரவுப்படி 4 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. https://www.forests.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/