தென்காசி, நவ. 25:

தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கனகராஜ், தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் வல்லம் ஷேக் அப்துல்லா பேசியதாவது: தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழுவின் தலைவராக நான் வெற்றி பெற காரணமாக இருந்த திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மா.செல்லத்துரை, என்னை ஊராட்சி ஒன்றியக் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்த 3 வது வார்டு வாக்காளர் பெருமக்கள் மற்றும் எனது வெற்றிக்கு அயராது பாடுபட்ட திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு  உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துகொள்கிறேன். தென்காசி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு சிறப்பாக செயல்பட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்திட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

தமிழக அரசு மூலம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அனைத்து திட்டங்களும் அனைத்து பகுதிகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும். அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களும் தங்கள் பகுதிக்கு தேவையான அத்தியாவசிய அவசிய பிரச்சனைகளை எடுத்துக்கூறி பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட்டு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 3 வது வார்டு உறுப்பினர் ஆர்.எம்.அழகுசுந்தரம் பேசும்போது தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பகுதி மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் சேர்மன் மற்றும் அதிகாரிகள் அனைத்து உறுப்பினர் களுக்கும் சமமாக நிதியினை ஒதுக்கி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

7 வது வார்டு உறுப்பினர் ச.மல்லிகா பேசும் போது காசிமேஜர்புரம் வல்லம் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் ஓடை,  மயான பாதை ரேசன் கடை கட்டிடம் பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது அதனை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

6 வயது வார்டு உறுப்பினர் வினோதி பேசும்போது : எனது வார்டுக்கு உட்பட்ட பிரானூர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், அங்கன்வாடி கட்டிடம் பழுது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைபாடுகள், உள்ளதாகவும் அதனை சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

8-வது வார்டு உறுப்பினர் சுப்புலட்சுமி பேசும்போது :- எனது வார்டுக்கு உட்பட்ட ஆயிரப்பேரி பாட்டப்பத்து பகுதியில் கால்நடை மருத்துவமனை கொண்டு வரவண்டும் , தாய் சேய் நல விடுதி அமைக்க‌ வேண்டும். மேலும் ஆயிரப்பேரி பாட்டப்பத்து, மத்தளம்பாறை பகுதிகளில் உள்ள பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் இவ்வாறு பேசினார்கள்.

அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தென்காசியில் நீதிமன்றம் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய சமுதாய நலக் கூட கட்டிடத்தை மீண்டும் சமுதாய நலக் கூடமாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது.

தென்காசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட  59 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அனைத்து தீர்மானங்களையும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு வாசித்தார்.  இந்தக் கூட்டத்தில் தென்காசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆ.கலாநிதி, கா.ப்ரியா, ஆர்.எம்.அழகுசுந்தரம் இரா.செல்வநாயகம், ரா.வினோதி ச.மல்லிகா ஆ.சுப்புலட்சுமி,  ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ஹெல்வின், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நக்கீரன், ஒன்றிய மேற்பார்வையாளர் ஆறுமுகச்சாமி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மா.செல்லத்துரை, தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.துரை ( எ) இராமையா, மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வல்லம் எம் திவான் ஒலி, மேலகரம் கிட்டுப்பாண்டியன், பட்டாக்குறிச்சி பி.எஸ். சுப்பிரமணியன், ஆயிரப்பேரி முத்துவேல், பாட்டப்பத்து எம்.ஆனந்தராஜ், சண்முகவேல், பெரிய பிள்ளைவலசை சரவணன்.

முருகேசன்,விஸ்வநாதபுரம் ஐயப்பன், திருச்சிற்றம்பலம் தங்கபாண்டியன், பிரானூர்  இராமையா, வல்லம் செல்வம், குத்துக்கல்வலசை காசி கிருஷ்ணன், திருச்சிற்றம்பலம் முருகன், ஆகியோர் தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஷேக் அப்துல்லா மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் கைத்தறி ஆடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். https://www.tnsocialwelfare.org

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today