தென்காசி, செப். 18- இ-சேவை மையங்களில் விலையில்லா வாக்காளர்அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 01.10.2021 முதல் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும்.

 எனவே அனைத்து வாக்காள்hகளும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/