தென்காசி, டிச. 21:
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெறுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்திற்காக மாநிலம் முழுவதும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 12 வது தேசிய வாக்காளர் தினகொண்டாட்டம், 2022 வரை நடைபெறும்.
இதன் ஒருபகுதியாக, மாநில அளவிலான இயங்கலை (ஆன்லைன்) போட்டிகள் “சுவீப் போட்டி -2022” என்ற தலைப்பின் கீழ் பின்வரும் பிரிவுகளுக்கு நடத்தப்படுகின்றன.
1. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள்
2. கல்லூரி மாணவர்கள்
3. பொதுமக்கள் (18 வயதிற்கு மேல்) மற்றும்
(மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளத் தவறிய மாணவர்கள்)
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம் வரைதல், சுவரொட்டி வரைதல், ஒருவரியில் விழிப்புணர்வு வாசகம் எழுதுதல், பாட்டு, குழு நடனம் மற்றும் கட்டுரை போட்டி போன்றவை மாவட்ட அளவில் நடத்தப்படும்.
மேலும் பொது மக்கள் (18 வயதிற்கு மேல்) மற்றும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கத் தவறிய மாணவர்கள் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் இணையதளத்தில் https://www.elections.tn.gov.in/ உள்ள “SVEEP Contest -2022” என்ற இணையவழியின் மூலமாக போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம்.
இயங்கலை(ஆன்லைன்) போட்டிக்கான கருத்துருக்கள் தேர்தல்கள் 100% வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு மற்றும் வாக்களிப்பை மேம்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முயற்சிகள் ஆகியவையாகும். இப்போட்டியில் 31.12.2021 அன்று மாலை 5 மணி வரை பங்கேற்கலாம்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத்தின் போது முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரு.2 ஆயிரம் வழங்கப்படும் என தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி/ மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today