தென்காசி, டிச. 30:

தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடலில் இருந்து சென்னைக்கு நேரடியாக புதிய அரசு விரைவு பஸ்சை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம், முக்கூடல் பேரூராட்சி பகுதியில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசு விரைவு பஸ் இயக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் தென்காசி தெற்கு  மாவட்ட திமுக செயலாளரிடம்  கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட திமுக மாவட்ட செயலாளர் இதுபற்றி தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து முக்கூடல் சென்னை அரசு விரைவு பஸ் இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொண்டார். 

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் முக்கூடல் பேரூராட்சி பகுதியில் இருந்து சென்னைக்கு நேரடியாக அரசு விரைவு பஸ் இயக்க உத்தரவிட்டார். அதன்படி முக்கூடல் – சென்னை அரசு விரைவு பஸ்ஸை  தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ சிவபத்மநாபன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் நெல்லை போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் கண்ணன், திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, ராமச்சந்திரன், சிதம்பரம், முருகேசன், முருகேஷ், குமார், பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலாளர் மாரிவண்ணமுத்து, ஊராட்சி மன்றத்தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன், முக்கூடல் பேரூராட்சி திமுக செயலாளர் லட்சுமணன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.  https://www.tnstc.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today