நெல்லை,  அக்.18:

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக
 களக்காடு தலையணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. 

இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில் களக்காடு தலையணை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.tamilnadutourism.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today