தென்காசி, செப். 1- புளியங்குடியில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. மத்திய சங்க துணைத்தலைவர் ஷார்ப் கணேசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பூவையா,, வசந்தம் சுப்பையா, சி.ஐ.டி.யு. அமல்ராஜ், ஏ.ஐ.டி.யூ.சி மணிவண்ணன், ஐ.என்.டி.யூ.சி அய்யப்பன், ஸ்டாப் யூனியன் ராஜாஜி மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர். நெல்லை டுடே.
https://www.nellai.today/