நெல்லை, அக். 27:

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் குமாரசாமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும். தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  மனு கொடுக்கப்பட்டது. https://www.tenkasi.nic.in ,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today