தென்காசி , டிச.28:
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சார்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துகொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.in லிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன்படி அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பதிவு எண் மற்றும் உரிய ஆவணங்களை உள்நாட்டு மீன்வள விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 42சி, 26-வது குறுக்கு தெரு, மகாராஜா நகர், திருநெல்வேலி-627011 என்ற அலுவலக முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு உள்நாட்டு மீனவ பயனாளிகள் 0462-2581488 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.fisheries.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today