தென்காசி , சூலை 27:

செங்கோட்டையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தை கண்டித்து எஸ்ஆர்எம்யு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில்நிலையம் முன்பு வைத்து தென்னக ரயில்வே மஸ்துார் யூனியன் செங்கோட்டை கிளை சங்கம் சார்பில் ஏஐஆர்எப் இயக்கத்தின் பொதுச் செயலாளரும், அனைத்து இந்திய மத்திய அரசு ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்ட குழுவின் தலைவருமான மிஸ்ரா தொலைபேசியினை ஒட்டுக்கேட்டு ஜனநாயகத்தின் குரல்வளையினை நெறிக்கும் மத்திய அரசையும்,
இந்திய ராணுவத்திற்கு தேவையான தடவாளங்களை தயாரிக்கும் அரசின் தொழிற்சாலைகளை  கார்ப்பரேசன்களாக மாற்ற துடிக்கும் மத்திய அரசையும்,
இந்திய மக்களை ஒன்றினைக்கும் பொது போக்குவரத்தான ரயில்வேயினை தனியார்மயமாக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும்  ஆர்ப்பாட்டம் நடந்தது. 
செங்கோட்டை கிளையின் . சபரி வாசன் மற்றும் . சீதாராமன் ஆகியோர் ஆலோசனையின்படி
 நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செங்கோட்டை கிளை தலைவர் சாபு தலைமைதாங்கினார். செயலாளர்  குமாரசாமி முன்னிலை வகித்தார்.
 உதவி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மத்திய அரசின் இந்த விரோத போக்கை கண்டித்து பேசினா். முடிவில் உதவித் தலைவர் அகிலன் நேரு  நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today