தென்காசி, சூலை 23:

நெல்லையில் மத்திய அரசை கண்டித்து  அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வேலைநிறுத்த தடைச்சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு சட்ட திருத்தங்களை கண்டித்தும், பாதுகாப்பு துறையில் தனியாருக்கு அனுமதி அளிப்பதை உடனே நிறுத்தக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், ஏ.ஐ.சி.டி.யு. மாவட்ட செயலாளர் சடையப்பன், எச்.எம்.எஸ். சுப்பிரமணியன், ஐ.என்.டி.யு.சி. உமாபதி சிவன், வீரை கிருஷ்ணன், ஏ.ஐ.சி.சி.டி.யு. கணேசன், டி.டி.எஸ்.எப். சந்தானம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today