தென்காசி,  நவ.27:

தென்காசி குத்துக்கல்வலசை ஐடிஐ முக்கு முன்பு மத்திய மோடி அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் விவசாய விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எம். வேல்முருகன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர்  சுப்பையா  ஏஐசிசிடியூ மாவட்ட பொறுப்பாளர் ஐயப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து ஏஐடியுசி மாவட்ட தலைவர் இசக்கி துரை பேசினார். மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். வேளாண்  சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்ட மசோதா 2020 நிறைவேற்ற கூடாது. முறைசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியத்தை சீர்குலைக்க கூடாது.

ஊரக வேலைவாய்ப்பு  திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுப்படுத்த  வேண்டும். தினசரி சம்பளத்தை உயர்த்த வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு விற்கக்கூடாது. பணமாக்கள் திட்டத்தை கைவிடவேண்டும். சாலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அங்கன்வாடி, ஆஷா சத்துணவு திட்டப்பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்திட வேண்டும். சாலை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்திட வேண்டும். போன்ற கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தென்காசி மாவட்ட செயலாளர் கணபதி கண்டன உரையீற்றினார். 
ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து விவசாய சங்க தென்காசி மாவட்ட தலைவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட தலைவர் அயூப்கான், சிஐடியு மாவட்ட பொருளாளர்  தர்மராஜ், மாவட்ட நிர்வாகிகள்  லெனின்குமார் , வன்னிய பெருமாள், மஹாவிஷ்ணு , குருசாமி,  கிருஷ்ணன், ஆரியமுல்லை, கற்பகவல்லி மற்றும் விவசாய சங்க  மாவட்ட செயலாளர் கண்ணன், துணைத்தலைவர்  வேல்மயில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், 
மாவட்ட  பொருளாளர் முருகேசன்,

தென்காசி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் மாரியப்பன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ்,  செங்கோட்டை முருகன் செல்லத்துரை, பேச்சிமுத்து,  முருகையா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேனகா, மாவட்ட தலைவர் ஆயிஷா, துணைத் தலைவர்கள் முனைவர் பேராசிரியர் சங்கரி, தங்கம் ,  பாரதி பெண்கள் ஒருங்கிணைப்பு குழு பொன்னுத் தாய்.

ஏஐடியுசி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் சாமி, கணேசன், கிருஷ்ணன், சுடலைமுத்து, ஜெயராமன்  விவசாய தொழிலாளர் சங்க தலைவர்கள் முத்துசாமி, கிட்டப்பா, லட்சுமணன், கதிரேசன் ஏஐசிசிடியூ மாவட்ட நிர்வாகிகள்    அயூப்கான் , ஷேக்மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.citucentre.org.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today