தென்காசி, நவ. 3:

நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 7ம் தேதி சிறப்பு ரயில் தென்காசி வழியாக இயக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே பொதுமக்களின் நலன் கருதி நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 7ம் தேதி தென்காசி வழியாக சிறப்பு ரயிலை இயக்குகிறது. தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களுக்கு இந்த ரயில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

நெல்லையில் இரவு 7 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் அம்பாசமுத்திரத்திற்கு 7.33 மணிக்கும், கீழக்கடையத்திற்கு 7.50 மணிக்கும், பாவூர்சத்திரத்திற்கு 8.03மணிக்கும், தென்காசிக்கு 8.15 மணிக்கும் வந்து சேருகிறது.

தென்காசியில் இருந்து இரவு 8.35 மணிக்கு புறப்படும் இச்சிறப்பு ரயில் கடையநல்லூருக்கு 8.48 மணிக்கும், சங்கரன்கோவிலுக்கு 9.13 மணிக்கும், ராஜபாளையத்திற்கு 9.38 மணிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 9.52 மணிக்கும், சிவகாசிக்கு 10.10 மணிக்கும், விருதுநகருக்கு10.35 மணிக்கும், மதுரைக்கு 8ம் தேதி 0.50 மணிக்கும் செல்கிறது.

மேலும் திண்டுக்கல்லுக்கு 1.55 மணிக்கும், திருச்சிக்கு 3.05 மணிக்கும், அரியலூருக்கு 4.25 மணிக்கும், விழுப்புரத்திற்கு 5.55 மணிக்கும், செங்கல்பட்டுக்கு 7.08 மணிக்கும், தாம்பரத்திற்கு 7.55 மணிக்கும் சிறப்பு ரயில் செல்கிறது. https://www.indianrailways.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today