தென்காசி, சூலை 15:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (ஹைதர் அலி அணி) சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (ஹைதர் அலி அணி) கட்சியின் மாநில அலுவலக பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கொலம்பஸ் மீரான், பொருளாளர் செங்கை ஆரிப், துணைத்தலைவர் ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் நயினார் முகம்மது கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாடத்தில் மாநில தொண்டர் அணி துணை செயலாளர் கோகோ அலி, மாவட்ட துணை செயலாளர்கள் திவான் ஒலி, சித்திக், ரஜாய், அசன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகமது காமில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி நகர தலைவர் அபாபில் மைதீன் நன்றி கூறினார்.
நிருபர் நெல்லை டுடே