தென்காசி,  சூலை 23:

தென்காசி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
டீசல், பெட்ரோல், விலை உயர்ந்து வருவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய- மாநில அரசுகளை கேட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மாரிச்செல்வம், துணை செயலாளர் குமார், பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today