நெல்லை, செப்.27-

நமது நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டும், இந்தியாவின் புலிகள் மற்றும் காடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய அளவில் முதலாவதாக தொடங்கப்பட்ட 9 புலிகள் காப்பகத்தை மையப்படுத்தி மாபெரும் விழிப்புணர்வு பேரணிக்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையொட்டி நெல்லை மாவட்டம் களக்காடு& முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பில் வாகனம் மற்றும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. 

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் வனத்துறையினர் கலந்துகொண்டு மேற்கு புறவழிச்சாலை, பெட்ரோல் பங்க் சிக்னல் வரை ஊர்வலமாக சென்றனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/