தென்காசி, ஆக. 14:

சிற்றாறு வடிநில கோட்டம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் செய்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்; தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை விதிகள் 2002 விதி 4(1) மற்றும் 32(3) (ஆ)-ன் கீழ் தென்காசி மாவட்டம் சிற்றாறு வடிநில கோட்டம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் நில உடைமையாளர்களின் பட்டியல் படிவம் ஏ மற்றும் வாக்காளர் பட்டியல் VA  பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு பிரிவு நிர்வாக அலுவலகம், கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அறிவிப்பு பலகையில் 16.08.2021 முதல் 22.08.2021 வரை பார்வைக்காக வைக்கப்படும். 

மேற்காணும் வாக்காளர் பட்டியலில் யாதொரு பெயரையும் சேர்ப்பதற்கு மறுப்புரை இருப்பின் படிவம் VI-யும், பெயர் சேர்ப்பதற்கு படிவம் VII –யும், பெயர் நீக்குவதற்கு படிவம் VIII-யும் மேற்காணும் நாட்களில் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு உதவிப் பொறியாளரிடம் 23.08.2021-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்;.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today