தென்காசி, சூலை 27:


வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட
மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  தெரிவித்திருப்பதாவது:-  
 தென்காசி மாவட்டத்தில் 18 வயதுநிறைவடைந்த அனைவரும் தங்கள் பெயர்களை  வாக்காளர் பட்டியலில் சேர்க்க nvsp.in  என்ற இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது  பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
 வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க படிவம்-6 ஐ www.tenkasi/nic.in/forms     என்ற இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களது வட்டாட்சியர் அலுவலகத்தில்  நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
முகவரி சான்றாக வங்கி கணக்கு புத்தக நகல், குடும்ப அட்டை நகல், கடவுச்சீட்டு நகல், ஓட்டுநர் உரிமம், சமீபத்தில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்த ஆவணம், சமீபத்திய குடிநீர் கட்டண ரசீது, சமீபத்திய தொலைபேசி கட்டண ரசீது, சமீபத்திய மின் கட்டண ரசீது, சமீபத்திய  எரிவாயு இணைப்பு கட்டண ரசீது ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை ஆவணங்களாக  சமர்பிக்கலாம். 
வயது சான்றாக பிறப்பு சான்று, பள்ளி / கல்லூரி இறுதி மாற்று சான்று அல்லது மதிப்பெண் சான்றிதழ், கடவுச்சீட்டு, வருமானவரி கணக்கு எண் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.
இது தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today