தென்காசி, செப். 17-


தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நடைபெறவில்லை. இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என மாட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்; செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்துவருவதாலும், கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெறும் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவதில்லை.
எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்த்து, தங்களது கோரிக்கை மனுக்களை  https://gdp.tn.gov.in     என்ற இணையதளத்தில் தங்களது கணினி அல்லது அலைபேசி மூலம் தாங்களாகவோ அல்லது தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள பொது இ-சேவை மையங்களிலோ மனுக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/