தென்காசி, அக். 10:


பாலருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தவண்ணமாக இருக்கின்றனர்.


தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தாலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்காசி அருகே கேரள மாநில எல்கையில் ஆரியங்காவு பாலருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும், இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதாலும் அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணமாக இருக்கின்றனர். பலர் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
இதே போன்று குற்றால அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து குளிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலாப் பணிகள் மற்றும் குற்றாலம் வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/