தென்காசி,  ஆக.13:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலம் உள்ளது. இந்த அலுவகத்தை திப்பணம்பட்டி ஊராட்சி பகுதி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். 

ஊராட்சிக்கு முழு நேர ஊராட்சி செயலர் நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் ஆணையாளர் (கிராம ஊராட்சி) திலகராஜ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர் கூறியதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today