தென்காசி, சூலை 31:

தென்காசியில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் எளிதில் அணுக மாவட்ட தொழில் மைய அலுவலகம் தற்போது தென்காசியிலேயே செயல்படுகிறது. தென்காசி மாவட்டத்தை சார்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், புதிய தலைமுறை தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கும், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள் தமிழக அரசின் மானிய உதவி பெறுவதற்கும், தொழில் நிறுவனங்களில் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தொழில் துவங்குவதற்கான முதற்கட்ட அனுமதி, உரிமங்கள், எளிதில் பெறுவதற்கு தென்காசி மாவட்ட தொழில் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இதற்கு ஏதுவாக தென்காசி மாவட்ட தொழில் மைய அலுவலகம் தற்போது  5/5(2), 5/5(3), திருமலைக்கோவில் ரோடு, குத்துக்கல்வலசை, தென்காசி – 627 803 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது.
எனவே ஏற்கனவே தொழில் செய்து வருபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையம், 5/5(2), 5/5(3), திருமலைக்கோவில் ரோடு, குத்துக்கல்வலசை, தென்காசி – 627 803 அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள் கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை டுடே

https://www.nellai.today