தென்காசி, நவ.5:

தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் மற்றும் கோல் இந்திய லேண்ட் சர்ச் ஆகியவை சேர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற தென்காசி மாணவி சமீனா பர்வீனை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் கேகேஎஸ்எஸ்ஆர். இராமச்சந்திரன் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். 

தென்காசியை சேர்ந்த மாணவி சமீனா பர்வீன் என்பவர் மதுரையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் மற்றும் கோல் இந்திய லேண்ட் சர்ச் ஆகியவை சேர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்றார். இவருக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் கேகேஎஸ்எஸ்ஆர்.இராமச்சந்திரன் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்,  மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மா.செல்லத்துரை, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வல்லம் சேக் அப்துல்லா, தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆயிரப்பேரி உதய கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today