தென்காசி,  டிச.24:

மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பாராட்டினார்.

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான மாநில அளவில் சரகங்களுக்கு  இடையேயான விளையாட்டுப் போட்டி திருப்பூர் மாவட்டத்தில் வைத்து 17.12.2021 முதல் 19.12.2021 ஆகிய  மூன்று நாட்கள் நடைபெற்றது. 
இப்போட்டியில் திருநெல்வேலி காவல் சரகத்தை சேர்ந்த அமைச்சுப் பணியாளர்கள் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். 

இதில் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தைச் சேர்ந்த அமைச்சுப்பணியாளர்கள் கபாடி, கைப்பந்து ஆகிய இரு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்றுள்ளனர். இந்நிலையில் போட்டிகளில் வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்கள் இன்று பரிசு  கோப்பை மற்றும் பதக்கங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற அனைவருக்கும், மேலும்  பல விளையாட்டு‌ போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகளை பெற தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். https://www.tnpdmsa.org

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today