தென்காசி,  சூலை 3-

பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ண ராஜ் கூறினார். 


தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பார்வையிட்டார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இதேபோல் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு வைப்பதன் மூலம் இயற்கை வளம், மண் வளம் மற்றும் நீர் வளத்தை பாதுகாக்க முடியும் என்றார். 


மேலும் காவலர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பேசுகையில், பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகவும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  மணிமாறன், காவல் ஆய்வாளர்சரஸ்வதி, சார்பு ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். 

நிருபர் நெல்லை டுடே