தென்காசி, சூலை 31:
தென்காசி மாவட்ட இணை இயக்குனர் (நலப்பணிகள்)மருத்துவர் வெங்கட்ரங்கன் பதவியேற்றுக்கொண்டார்.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது மருத்துவர்கள் ,செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புதிய இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கனுக்கு, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் பொன்னாடை அணிவித்து வரவேற்றுப் பேசினார்,
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் துணை இயக்குனர் குடும்ப நலம் மருத்துவர் ராமநாதன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் அருணா, உறைவிட மருத்துவர் அகத்தியன், பல் மருத்துவர் லதா, ,மருத்துவர் கிருஷ்ணன், மற்றும் தென்காசி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே