தென்காசி டிச . 17:
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் தென்காசி மாவட்ட சீனியர் பெண்கள் கபடி அணி வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது. திருவண்ணாமலையில் டிசம்பர் 30 ம் தேதி மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது இதில் கலந்து கொள்ள தெங்காசி மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தேர்வு குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் தென்காசி மாவட்ட கபடி கழக செயலாளர் அருள் இளங்கோவன், கன்வீனர் தீயணைப்புத்துறை கணேசன், சேர்மன் ராமசாமி, குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சாவித்திரி மற்றும் நடுவர்கள் தேர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
இதில் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த 60 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதிலிருந்து 15 பேர் தேர்வு செய்யப்பட்டு இதில் சிறப்பாக விளையாடும் 12 வீராங்கனைகள் மாநில போட்டிக்கு கலந்து கொள்வார்கள் என்று தென்காசி மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். https://www.sdat.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today