தென்காசி, அக். 21:
தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக பதவியேற்கும் விழா தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
1வது வார்டு வே.சந்திரலீலா- (திமுக),
2வது வார்டு மா.மாரிமுத்து- (திமுக),
3வது வார்டு இரா.தேவி (மதிமுக),
4வது வார்டு பி.சுதா ( திமுக)
5வது வார்டு அ.ராஜாதலைவர் (திமுக),
6வது வார்டு கனிமொழி (திமுக),
7வது வார்டு பூங்கொடி (திமுக),
8வது வார்டு தி.உதயகிருஷ்ணன் (காங்கிரஸ்),
9வது வார்டு இரா.சாக்ரடீஸ்- (திமுக),
10வது வார்டு அ.முத்துலெட்சுமி- (திமுக),
11வது வார்டு ரா.சுப்பிரமணியன் (காங்கிரஸ்),
12வது வார்டு சு.தமிழ்செல்வி (திமுக)
13வது வார்டு சி.சுதா- (காங்கிரஸ்),
14வது வார்டு கோ.மைதீன்பீவி- (திமுக)
ஆகியோர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன், வழக்கறிஞர் கே.பி.குமார் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு மாவட்டம் ஊராட்சி உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தென்காசி ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிஏற்புவிழா தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.
தேர்தல் அலுவலர் பார்த்தசாரதி ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் .
1-வது வார்டு கவுன்சிலராக ஆ.கலாநிதி ( திமுக), 2-வது வார்டு கவுன்சிலராக கா.பிரியா (அதிமுக), 3-வது வார்டு கவுன்சிலராக மு. அழகுசுந்தரம் (திமுக) , 4-வது வார்டு கவுன்சிலராக மு.சேக்அப்துல்லா (திமுக),
5-வது வார்டு கவுன்சிலராக செல்வவிநாயகம் (திமுக), 6-வது வார்டு கவுன்சிலராக இரா.வினோதி (திமுக), 7-வது வார்டு கவுன்சிலராக ச.மல்லிகா (திமுக), 8-வது வார்டு கவுன்சிலராக ஆ.சுப்புலட்சுமி (திமுக), 9-வது வார்டு கவுன்சிலராக மு.கனகராஜ்முத்துப்பாண்டியன்(திமுக) பதவிப் பிரமாண உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/