தென்காசி.அக்.14:
தென்காசி மாவட்ட த்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலை முழுமையாக ரத்து செய்துவிட்டு மறு தேர்தல் நட த்த வேண்டும் என தென்காசி வடக்கு மாவ ட்ட அமமுக செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன் தென்காசி ஆட்சித்தலைவரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட 76 வேட்பாளர்களுடன் ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் அய்யாத்துரைப் பாண்டியன் மனு கொடுக்க வருகை தந்தார் .
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவினர் தங்களது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறை கேடுகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். குறிப்பாக சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் வேட்பாளருக்கு முன்னிலையில்தான் சீல் அகற்றபட வேண்டும். ஆனால் அப்படி அகற்றப்படவில்லை.
அது போல, வாக்குசாவடி தலைமை அலுவலரின் கையொப்பமிட்டு வேட்பாளருக்கு அளித்த படிவத்தில் வாக்குகளும் , சீல் அகற்றப்ப ட்ட பின்பு எடுத்த வாக்குகளையும் சரி பார்த்து இருக்க வேண்டும். அதன் பின்பு , சீல் அகற்றப்பட்ட பெட்டியில் இருந்து வாக்குகளை பிரிக்கும் இடத்தில் வேட்பாளர்கள் அனுமதிப்படவில்லை .
வாக்கு எண்ணும் மையத்தில் 4 முதல் 5 மணி நேரம் காலதாமதமானது. கால தாமதத்திற்கு அதிகாரிகளிடம் சரியான பதில் இல்லை. சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் இருந்த வாக்குகள் மட்டும்தான் வாக்கு எண்ணும் மையத்தில் கொண்டு வரப்பட்டதா? மேலும் சீல்வைக்கப்பட்ட வாக்கு பெட்டிக்குள் இருந்த வாக்கு சீட்டுகள் நன்றாக மடித்து வைக்கப்பட்டவை . ஆனால் , மடித்து வைக்கப்படாத புத்தம் புதிய வாக்கு சீட்டுகள் அனைத்தும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மேஜைக்கு ஒரு முகவர் என்ற விதி ஆளுங்கட்சியினர்களால் கடைப்பிடிக்கப்படவில்லை .
கொரோனா காலத்தில் கடைபிடிக்க வேண்டிய எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப் படவில்லை. ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் நிரம்பி இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் எப்படி வாக்கு சரியாக எண்ணப்படுகிறதா என்று உறுதிப்படுத்த முடியும். வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூத் எண்ணையும் அதில் உள்ள வாக்குகளையும் அறிவித்துவிட்ட பின்பு தான் வாக்கு எண்ணிக் கையை தொடங்க வேண் டும் .
ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர் பெற்ற வாக்குகளை அறிவித்த பின்பு தான் அடுத்த சுற்றை தொடங்க வேண்டும் . வாக்கு எண்ணிக்கை முன்னுக்குப்பின் முரணாக அதிகாரிகள் எண்ணப்படி வாக்கு எண்ணிக்கையை நடத்தினார்கள். வேட்பாளர்கள் குழப்பத்திலேயே இருந்தார்கள் . கண்காணிப்பு கேமரா வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டிருந்தது, ஆனால் பொருத்தப்பட்டிருந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை .
தேர்தல் நடைமுறை விதிகளை பின்பற்றாமல் ஆளுங்கட்சியினரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒரு தலை பட்சமாக நடந்து கொண்டு தேர்தல் வெற்றிகளை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள் . ஆகவே இந்த முறைகேடாக நடை பெற்ற தேர்தலை தமிழக முதல்வர் நேர்மையானவர் என்றால் முழுமையாக ரத்து செய்து மறுதேர்தல் நடத்த வேண் டும். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம் .
இந்த மனுவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி , தமிழக முதல்வருக்கும் அனுப்ப உள்ளோம் , தென்காசி மாவட்டத்தில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
அப்போது அவருடன் மாவ ட்ட இணைச்செயலாளர் குமரேசராஜா, மாவட்ட துணைச்செயலாளர் சுமதி கண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுப்பிரமணியன் (எ) சுரேஷ், மாணவரணி செயலாளர் வெங்கடேஷ், மகளிரணி செயலாளர் நாகலெட்சுமி,
ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பாலமுருகன், பேரூர் கழக செயலாளர்கள் துரைப்பாண்டி, அம்மாதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today