தென்காசி,  அக்.22:

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் முறையிடும் போராட்டம் நடத்தினர். மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேருராட்சி , ஊராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்,  தூய்மை காவலர்கள்  விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தினசரி ரூ 600 ஊதியம் தீர்மானிக்க வேண்டும்.

அரசு அறிவித்த  கொரோனா நிவாரண நிதி  ஊக்க தொகை ரூ 15000 உடனே வழங்கிடவேண்டும் . பிஎப் பிடித்தம் செய்த கணக்கு சீட்டு , இஎஸ்ஐ பிடித்தம் செய்த மருத்துவ அடையாளஅட்டை உடனே வழங்கிட வேண்டும்.
பணிசெய்திட மழைகோட்டு , செருப்பு , சோப்பு வழங்கிட வேண்டும். 

நகராட்சி, பேருராட்சி, ஊராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ,கான்ராக்ட், சுயஉதவி குழு பணியாளர்களை நிரந்தரம் படுத்திட வேண்டும் மற்றும் பல கோரிக்கைகளை வலியூறுத்தி மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகம் முன்பு முறையிடும் போராட்டம் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர்,சின்னசாமி,மாவட்டபொருளாளர் மகாலிங்கம், மாவடட்ட துணைசெயலாளர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன்போராட்டதை துவக்கி வைத்தார் .  சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர்  லெனின்குமார் முடித்து வைத்தார்.
சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ராஜசேகர்  மாவட்ட பொருளாளர் தர்மராஜ், மாவட்ட துணைசெயலாளர் கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பேச்சிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வி தொ ச மாவட்ட பொருளாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நாரயணன்,  கருப்பசாமி,  முத்துகிருஷ்ணன் , நாகம்மாள்,  மாரியப்பன் உட்பட 300 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் பங்கேற்றனர்.

படவிளக்கம்:

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் முறையிடும் போராட்டம் நடத்தினர். https://www.tenkasi.nic.in


செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today