தென்காசி, சூலை 5-
குற்றாலத்தில் கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
தற்பொழுது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. தடையை நீக்க வேண்டும் என்று குற்றாலம் வர்த்தகர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தர் ராஜ் குற்றாலம் மெயின் அருவிக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப் படுவார்களா? மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கேட்டபோது, அரசு அனுமதி வழங்கியதும் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்றார்.
இந்நிலையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது விரைவில் நீக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர் நெல்லை டுடே