தென்காசி , நவ. 10:

சிவகிரி பகுதியில் உள்ள குளங்களை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டணம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி செங்குளம் மடையில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக சிவகிரி பகுதியில் உள்ள ராஜசிங்கப்பேரி, குலசேகரப்பேரி குளங்களுக்கு அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இந்த குளங்களின் கரைகள், மடைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இக்குளங்களை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் குளத்து பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன், வேலம்மாள், பொறியாளர் மார்க்கோனி, வாசுதேவநல்லூர் ஒன்றிய பெருந்தலைவரும் ஒன்றிய திமுக செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன், சிவகிரி தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் வெங்கடசேகர், மைதீன் பாஷா, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரும் பேரூர் திமுக செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம்,

மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மாடசாமி, நல்லசிவன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வடிவேலு, வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம அலுவலர் பாக்கியராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ராமராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கிளைச் செயலாளர் முருகன்  ஆகியோர் உடன்  இருந்தனர். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today