தென்காசி,  நவ.9:

தென்காசியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் ஆலோசனை நடத்தினார்.
நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட தேர்தல் அலுவலர்  கோபால சுந்தரராஜ்  தலைமை வகித்தார். கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக,  அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் . https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today