தென்காசி, ஆக.3:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் பண்பொழியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அலி தலைமை தாங்கினார். சுற்றுப்புறச்சூழல் அணிமாவட்ட செயலாளர் முஜீப், தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் சுலைமான், இலக்கிய அணி ஷாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த .கூட்டத்தில் மாநில செயலாளர் மைதீன் சேட் கான், தென்காசி மாவட்ட தமுமுக தலைவர் முஹம்மது யாக்கூப், தமுமுக மாவட்ட செயலாளர் அஹமதுஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் இஸ்மத் மீரான், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட துணைச்செயலாளர் கடையநல்லூர் பாசித், உலமா அணி செயலாளர் ஷேக் அலி, விழிஅணி மாவட்ட பொருளாளர் சேகணா, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தலைவராக முகம்மது உசேன், கிளை செயலாளர் சாதிக் ராஜா, மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் சாகுல் ஹமீது, கிளையின் பொருளாளர் அஷ்ரப், துணைத் தலைவர் செய்யது சுலைமான், துணை செயலாளர் முகம்மது யாசர், சதாம் உசேன், மனிதநேய மக்கள் கட்சி துணை செயலாளர்கள் ஹஸன் முஹம்மது, திருமலை குமார், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது எனவும், தமுமுக கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது எனவும், கடையநல்லூர் செல்லும் பேருந்து பண்பொழி ஐந்துபுளி முக்கு வரை வந்து செல்வதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும். என்றும் பண்பொழியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரவும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் தென்காசி மாவட்ட தமுமுக தலைவர் முஹம்மது யாக்கூப், நன்றி கூறினார்.
நிருபர் நெல்லை டுடே