தென்காசி, சூலை 13-


தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் தலித் சமுதாயத்தினர் படுகொலைகள் அடிக்கடி நடைபெறுவதாகவும், அதனை கண்டித்தும்,  மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வள்ளுவசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் முகிழரசன், மாநில இளம்புலி அணி செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் பேசினா். 


ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கி துரை, எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ஜாபர் அலி உஸ்மான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகமது யாகூப், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வீரனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூய்மைப் பணியாளர் சுயமரியாதை இயக்க நிர்வாகி வாசு வள்ளுவன் நன்றி கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today