நெல்லை, சூலை 29:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாவட்ட தலைவர் விக்னேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் அய்யப்ப குலசேகர ஆழ்வார், பொருளாளர் வைகுண்டபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணுவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நெல்லை மாவட்ட   ஆட்சித் தலைவர்  உத்தரவுப்படி துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கான தற்காலிக முதுநிலை பட்டியல் வெற்று பட்டியலாக கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

 மீதி தகுதி உள்ள நபர்களின் முதுநிலை பட்டியலையும் வெளியிட வேண்டும். 

நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டபோது ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் முதுநிலை மற்றும் பணி ஒதுக்கீடு செய்த ஆணை வெளியிடப்படாமல் உள்ளது. உடனே அதை வெளியிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் நக்கீரன், தென்காசி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today