தென்காசி, டிச.2:

தமிழக – கேரள மாநில அரசு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுகிறது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கடந்த 20 மாதங்களாக தமிழக அரசுப் பேருந்து கேரளாவிற்கும் கேரள அரசு பேருந்து தமிழகத்திற்கும் சென்று வரதடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் இரு மாநில பயணிகள் மற்றும் பொதுமக்கள்  மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக இன்று முதல்  தமிழக – கேரள மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள்  இயக்கப்பட்டது.

இன்றைய தினம் இயக்கப்பட்ட இரு மாநில பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகள்,பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கு செங்கோட்டை நகர திமுக செயலாளரும், நகர வர்த்தக சங்க தலைவருமான எஸ்.எம்.ரஹீம் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர வர்த்தக சங்கம் மற்றும் திமுக  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

கடந்த 20 மாதங்களுக்கு பிறகு நேற்று கேரளாவிற்கு தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது . தென்காசியில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா , திருவனந்தபுரம் , கோட்டயம் , எர்ணாகுளம் ஆலப்புழா உள்ளிட்ட ஊர்களுக்கு கொரோனோ தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள் தமிழக அரசின் உத்தரவின்படி நேற்று முதல் தென்காசியில் இருந்து செங்கோட்டை வழியாக ஓடத்தொடங்கியது .

இதில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக கொரோனோ தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் அல்லது கொரோனோ பரிசோதனை சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டுமென தெரிவிக்கப் பட்டுள்ளது .கேரளாவிலிருந்து செங்கோட்டை வழியாக தென்காசிக்கு வருகைதரும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் புளியரை சோதனைச்சாவடியில் சுகாதாரத் துறையினர் மூலம் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை சரிபார்த்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்க பட்டனர்.

20 மாதங்களுக்கு பிறகு நேற்று போக்குவரத்து தொடங்கிய முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளா இடையே பஸ் போக்குவரத்து துவங்கியது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://www.tnstc.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today