தென்காசி, சூலை 28:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க துணை பொதுச்செயலாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார்.

கடையநல்லூர் நகராட்சியில்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினசரி சம்பளம் ரூ.272 என்று இருப்பதை ரூ.422-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் ரவிசந்திரன் மற்றும் புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர்  (பொறுப்பு) சூரியமூர்த்தி ஆகியோர்  பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து  அவர்கள் கலைந்து சென்றனர். 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today