நெல்லை,செப்.15-

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக வருகிற அக்.6-ந் தேதியும், 9-ந் தேதியும் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இதனைமுன்னிட்டு  தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில்  சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

முகாமில் எப்படி வேட்பு மனுக்களை பெற வேண்டும். விண்ணப்பங்கள் எப்படி நிரப்பப்பட்டிருக்க வேண்டும். எந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் குமாரதாஸ் தலைமையில் பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாலசுப்பிரமணியன், மணி மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/