தென்காசி, சூலை 16:
ராதாபுரம், திசையன்விளை தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட கிராம மக்களின் நலன் கருதி புதிதாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெறுவது தொடர்பான சிறப்பு முகாம் ராதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காகவும், புதிய ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாகவும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயனடைய அறிவுறுத்தப்பட்டது.
குறுவட்டம் வாரியாக பொதுமக்களின் மனுக்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் அலுவலகத்தினர் தெரிவித்தனர்.
முகாமில் ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் கனகராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அழகிரி, ராதாபுரம் தாசில்தார் ஏசுராஜன், திசையன்விளை தாசில்தார் செல்வகுமார், ராதாபுரம் வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், திசையன்விளை வட்ட வழங்கல் அலுவலர் கணபதி, கூட்டுறவு சார்பதிவாளர் ராதாபுரம் செல்வகுமார், வள்ளியூர் மன்னர்ராஜா, ராதாபுரம், நாங்குநேரி வட்ட வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க மேலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே