தென்காசி, டிச .10:

தென்காசி மாவட்டம்  செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட இலத்தூர் ஊராட்சியில் சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு மதுநாத பேரி குளத்துக்கரையில் 500 பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு இலத்தூர் – பி.எஸ் டெக்னாலஜி, பாட்டப்பத்து -டால்பின் வாழ்வியல் அமைப்பு , கோதண்டராமபுரம் – சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ்,  அமைப்பு சார்பில் மதுநாத பேரி குளத்துக்கரையில் 500 பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு டால்பின் வாழ்வியல் அமைப்பு , பி.எஸ்.டெக்னாலஜி மற்றும் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ்  சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ச.சுரேஷ், கி.புதியவன் ஆகியோர் தலைமை தாங்கினர். வழக்கறிஞர் விஜயராணி, துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜா லெட்சுமணன்  வரவேற்று பேசினார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தேனீ வளர்ப்பு பயிற்சியாளர்  முனைவர் ரா.மாரிச்செல்வம்  கருத்துரை வழங்கி பனை விதைகள் நடவு‌செய்யும் பணியை‌ துவக்கி‌ வைத்தார்.

அதனை தொடர்ந்து பனையும் மண் வளமும் என்ற தலைப்பில் நுண்ணுயிரியல் மற்றும் இயற்பியல் துறை இளம் விஞ்ஞானிகள் முருகேஷ், கார்த்திக் ராஜா, மனோஜ் பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் டால்பின் வாழ்வியல் அமைப்பினர் மற்றும் பனை ஆர்வலர்கள் மாதவன், இளவரசன், இசாந்த், முரளி,தர்மேந்திரன்   ‌ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர். இறுதியாக இசக்கிமுத்து நன்றி கூறினார். https://www.tnagrisnet.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today